/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை முதல்வர் உதயநிதி தி.மு.க., இனிப்பு வழங்கல்
/
துணை முதல்வர் உதயநிதி தி.மு.க., இனிப்பு வழங்கல்
ADDED : செப் 30, 2024 06:08 AM

விருத்தாசலம்: அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றார்.
இதையொட்டி, விருத்தாசலம் கடைவீதியில், மேற்கு மாவட்ட நகர தி.மு.க. சார்பில், பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் ராமு, நகர இளைஞரணி நகர அமைப்பாளர் பொன் கணேஷ், அவை தலைவர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட பிரதிநிதி பழனிசாமி, சரவணன், சிறுபான்மை பிரிவு அன்சர் அலி, கவுன்சிலர்கள் அன்பழகன், முத்து, சுற்றுச்சூழல் அணி முத்து, வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடேசன், இளைஞரணி தளபதி குமார், தளபதி, மணிவண்ணன், செந்தில்குமார், கார்த்திக்கேயன், கவுன்சிலர் அறிவழகி முருகன், நிஷாந்த், துரை கோவிந்தசாமி, வினோத், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.