/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.80 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
/
ரூ.80 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ரூ.80 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ரூ.80 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ADDED : நவ 26, 2024 06:58 AM

கடலுார்: கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் மூலம் 12,100 பயனாளிகளுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வரவேற்றார்.
விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 23.93 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மேல்புவனகிரி, கம்மாபுரம் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கட்டடங்கள், விருத்தாசலம் உதவி இயக்குநர் அலுவலக கட்டடம், கடலுார் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டடம் ஆகியவற்றிற்கு உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினார். பின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1001 பயனாளிகளுக்கு 80 லட்சம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு 74 லட்சத்து 98 ஆயிரத்து 550 மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 9,285 பயனாளிகளுக்கு 71 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 100 பயனாளிகளுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, கடலுார் முதுநகரில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது, விஷ்ணு பிரசாத் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன்,
ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு
துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கமிஷனர் டாக்டர் அனு, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநகர செயலாளர் ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், டாக்டர் பிரவீன் அய்யப்பன், கவுன்சிலர் பிரகாஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் நன்றி கூறினார்.
பிறந்த நாள் வாழ்த்து
துணை முதல்வர் உதயநிதிக்கு நாளை (27ம் தேதி) பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. இதை, மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, மைக்கில் கூறினார்.
இதை தொடர்ந்து, விழாவில் பங்கேற்றவர்கள் உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் விழா மேடையில் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி சால்வை அணிவித்தார்.