ADDED : பிப் 15, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
வி.சி., கட்சி சார்பில் கடலுார் கலெக்டர் அருண்தம்புராஜிடம், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மனு அளித்தார். அதில் கீழ்செருவாய், மேல்ஐவனுார், கீழ்ஐவனுார், விளம்பாவூர் ஆகிய கிராமங்களில் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
அப்போது, மாநகராட்சி மேயர் சுந்தரி, வி.சி., கட்சி முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன்பன் மற்றும் ஆறுமுகம், அர்ஜுனன், தங்கராஜ், சிட்டு உடனிருந்தனர்.