/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் பி.என்.பாளையம் ஏரியில் சொட்டு தண்ணீர் இல்லை
/
பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் பி.என்.பாளையம் ஏரியில் சொட்டு தண்ணீர் இல்லை
பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் பி.என்.பாளையம் ஏரியில் சொட்டு தண்ணீர் இல்லை
பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் பி.என்.பாளையம் ஏரியில் சொட்டு தண்ணீர் இல்லை
ADDED : டிச 09, 2024 07:33 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையம் ஏரி அதிகாரிகள் அலட்சியத்தால் துார்வாராமல் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் வெள்ளப்பெருக்கிலும் ஏரி நிரம்பாத அவலம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே 100 ஏக்கர் பரப்பில் பி.என்.பாளையம் ஏரி உள்ளது. இந்த சுற்றுவட்டாரத்தில் இது மிகபெரிய ஏரியாகும். இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாராததால் கருவேல மரங்கள் வளர்ந்து ஏரி துார்ந்து போய் உள்ளது. இதனால் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் ஏரியை ஆக்கிரமித்து வருகின்றனர்.மேலும் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லை.
பெண்ணையாற்றில் இருந்து கொங்கராயனுார் ஏரி,மேல்பட்டாம்பாக்கம் ஏரிக்கும் அங்கிருந்து பி.என்.பாளையம் ஏரிக்கும் தண்ணீர் வரும்.ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் வந்தும் ஏரிகளுக்கு தண்ணீர் வராத அவலநிலை நீடித்து வருகின்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் முழுமையாக தண்ணீர் தேங்கி நின்றதால் அப்பகுதி விவசாயம் செழித்ததால் ,விவசாயிகள் ,விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது.
தற்போது விவசாய பரப்பு குறைந்ததால் விவசாய தொழிலாளர்கள் நகரத்தை நோக்கி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் ஏரி மற்றும் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.