ADDED : செப் 13, 2025 09:09 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பறிமுதல் செய்த பட்டாசுகளை நிபுணர்கள் முன்னிலையில் போலீசார் அழித்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு உரிய அனுமதி இல்லாமல் பிரபாகரன் என்பவர் பட்டாசு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு கடலுார் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் பட்டாசுகளை பாதுகாப்பாக அழிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நேற்று விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் போடப்பட்டது. நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் முன்னிலையில் கமாண்டோ நிபுணர் குழுவினர் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க செய்து அழித்து பள்ளத்தை மூடினர்.