/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி அமைச்சர் கணேசன் ஆய்வு
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி அமைச்சர் கணேசன் ஆய்வு
ADDED : மே 04, 2025 04:48 AM

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த விநாயகனந்தல் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
சிறுபாக்கம் அடுத்த விநாயகனந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகள், சாலை வசதி, தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்.
இதே போல் கச்சிமயிலுார், காஞ்சிரங்குளம், கீழ் ஓரத்துார், கொளவாய், ரெட்டாக்குறிச்சி, மாங்குளம் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சப் கலெக்டர் விஷ்ணுபிரியா, தாசில்தார்கள் செந்தில்வேல், மோகன், பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முகசிகாமணி, ஒன்றிய தி.மு.க., செயலாளர் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணியன், பழனிவேல் உடனிருந்தனர்.