/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள் : அதிகாரிகள் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள் : அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 19, 2025 03:06 AM

கிள்ளை : தில்லைவிடங்கன் ஊராட்சியில் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் 50 பேர் பட்டறிவு பயணமாக நேற்று மாவட்ட பயிற்சி அலுவலர் தனம் தலைமையில், கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு வந்தனர்.
அங்கு, புதியதாக கட்டப்பட்டு வரும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், சுகாதார வளாகம், குளம் சீரமைப்பு பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை பார்வையிட்டனர்.
முன்னதாக, ஊராட்சி மன்ற அலுலகத்தில் நடந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்ட வள மைய அலுவலர் சங்கீதா, கடலுார் மாவட்ட வள மைய அலுவலர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, தில்லைவிடங்கன் ஊராட்சி செயலர் ரமேஷ், வட்டார வள மைய பயிற்றுநர்கள் விநாயகமூர்த்தி, சிலம்பரசன், ஆரோக்கியசெல்வி பங்கேற்றனர்.