தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்; சபா ராஜேந்திரன் பெருமிதம்

 ரூ. 100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்; சபா ராஜேந்திரன் பெருமிதம்

 ரூ. 100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்; சபா ராஜேந்திரன் பெருமிதம்


ADDED : ஏப் 17, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடக்குத்து நகர் பகுதிகளில் , தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அங்கு சபா ராஜேந்திரன் பேசியதாவது:

கடந்த, 5 ஆண்டுகளில் நெய்வேலி தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். குறிப்பாக, இப்பகுதிகளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான செலவில் தரமான தார் மற்றும் சிமெண்ட் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.

வரும் 5 ஆண்டுகளில் தொகுதியில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் கூடிய தரமான அரசு பொது மருத்துவமனை மற்றும் தொகுதிக்கென தனி தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி தருகிறேன்.

உங்கள் குடும்பத்தில் ஓருவராக இருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், வெங்கடேசன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் பாக்யராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் கோபு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us