/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 14, 2024 05:12 AM

நெய்வேலி : நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து, ரூ. 95 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் உள்ள என்.ஆர். ராஜன் நகர், பவுனாம்பாள் நகர், மாருதி நகர், காந்தி நகர், தங்கம் நகர், காந்தி கிராமம், சக்தி நகர் உள்ளிட்ட 11 இடங்களில் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மேலும், மேல் வடக்குத்து கிராமத்தில் ரூ. 16 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி தி.மு.க.,மேற்கு ஒன்றிய தலைவர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், முன்னாள் தொ.மு.ச., தலைவர் சிவந்தான்செட்டி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், வடக்குத்து ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.