தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வளர்ச்சித்திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சித்திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சித்திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : பிப் 21, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : 'உங்களுடன் உங்கள் ஊரில்' திட்டத்தில் பெண்ணாடம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியில் கருணாநிதி நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 22 லட்சம் ரூபாயில் முக்குளம் பூங்கா அமைக்கும் பணி, வெள்ளாற்றங்கரை பகுதியில் 2 கோடியே 58 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளை, நேற்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அம்பேத்கர் நகர் அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், மாளிகைக்கோட்டம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர், முக்குளம் பூங்கா அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க பேரூராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயல் அலுவலர் (பொறுப்பு) மயில்வாகனன், தாசில்தார் அந்தோணிராஜ், பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல், முதல்நிலை எழுத்தர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us