/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு; நடராஜர் கோவிலில் பரபரப்பு
/
பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு; நடராஜர் கோவிலில் பரபரப்பு
பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு; நடராஜர் கோவிலில் பரபரப்பு
பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு; நடராஜர் கோவிலில் பரபரப்பு
ADDED : டிச 30, 2024 05:47 AM
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் சைவ, வைணவ சமய ஒற்றுமை வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.
தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சைவ, வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள, கோவிந்தராஜ பெருமாள் கோவில் எதிரில், அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாக அறிவித்திருந்தனர். அதனையொட்டி, நேற்று காலை தெய்வீக பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர், கீழ சன்னதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சைவ, வைணவ ஒற்றுமை ஓங்க வேண்டும் என்று முழக்கமிட்டபடியே, நடராஜர் கோவிலுக்குள் சென்றனர்.
தொடர்ந்து, தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் உள்ள கொடிமரம் அருகில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் 108 அகல் விளக்கு ஏற்றி, கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
அப்போது, கோவிந்தராஜ பெருமாள் கோவில், கொடி மரத்தை மாற்ற அறநிலையத்துறையின் முயற்சிக்கு, ஏற்கனவே தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்றைய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தால் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.