தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

 மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

 மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஜன 25, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து யாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி, 26வது ஆண்டாக கடந்த 18ம் தேதி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். தினசரி ஜெகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. அதில், 7ம் நாள் நிகழ்வாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. ஜெகமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், சிறப்பு பூஜையுடன் படையலிடப்பட்ட சாதத்தை பக்தர்கள் தரையில் கொட்டி சாப்பிட்டனர்.

குழந்தையின்மை, திருமண பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வரும் 29ம் தேதி சமயபுரம் பக்தர்கள் இருமுடி கட்டி, யாத்திரை செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us