/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
நடராஜர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : நவ 19, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோமவாரத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, திரளான பக்தர்கள் குவிந்தனர். சித்சபையை 108 முறை வலம் வந்தனர். நடராஜர் கோவிலில் ஆதிமூலநாதர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு அதிகாலையிலிருந்தே அதிகளவு பக்தர்கள் வந்ததால், வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.