/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்
/
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்
ADDED : டிச 20, 2024 11:38 PM

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு, மயிலாடுதுறை தருமபுரம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், பாடலீஸ்வரர், பெரியநாயகி தாயாருக்கு நாகராஜ குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். அப்போது, ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். பின், கோவிலில் நடந்து வரும் திருப்பணி குறித்து கேட்டறிந்து, விரைந்து முடிக்க கூறினார்.
முன்னதாக தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், திருச்சோபுரம் சிவகுருநாதர் கோவில் மற்றும் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்களில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.