ADDED : டிச 17, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; பூர்வீக சொத்தை மோசடியாக பெயர் மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி அடுத்த வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்; இவர் தனது குடும்பத்தினருடன் கடலுார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தங்களது பூர்வீக சொத்து, பெயர் மாற்றம் செய்யப்பட்டு மோசடி நடந்துள்ளது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.