ADDED : ஏப் 25, 2026 05:35 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் கிளை சிறையில், டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில், கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு, கொலை, போக்சோ போன்ற கொடுங்குற்றங்களை தவிர்த்த மற்ற கைதிகள் உள்ளனர். இந்நிலையில், வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் நேற்று கிளைச் சிறையில் ஆய்வு செய்தார்.
அப்போது, வருகை பதிவேடுகள், கோப்புகளை சரிபார்த்த அவர், சிறையில் பாதுகாக்கப்படும் கைதிகளிடம் அவர்களின் குற்றச்செயலுக்கான காரணம், உணவுகள், அடிப்படை வசதிகள் தன்னிறைவாக உள்ளதா என கேட்டறிந்தார். கண்காணிப்பாளர் (பொறுப்பு) தில்லைகோவிந்தன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
