/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோபாலபுரம் கோவிலில் தீமிதி திருவிழா
/
கோபாலபுரம் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : மார் 14, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வாக, சிவராத்திரி படையல், பாரதம், சக்தி பிறப்பு, மயான கொள்ளை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று ஏழாம் நாள் உற்சவமாக தீமிதி திருவிழா நடந்தது.
இதையொட்டி, ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

