/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
' தினமலர் -- பட்டம்' வினாடி வினா போட்டி
/
' தினமலர் -- பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 07, 2025 12:50 AM

கடலுார்: தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டி நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார்.
போட்டியில் தேர்வான 16 மாணவிகள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது. போட்டியின் இறுதியில் பிளஸ் 1 மாணவிகள் விஷாலினி, கனிஷ்கா முதலிடமும், பிளஸ் 1 மாணவிகள் சுனிதா, அனுஷ்கா இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, திறன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர்கள் முருகேஸ்வரி, ராஜவி மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

