தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி


ADDED : நவ 29, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி, செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர்- பட்டம்' வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும் பட்டம் நாளிதழ் அளித்து ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பதில் சொல், பரிசுவெல் வினாடி வினா போட்டி நடத்தியது.

பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான 16 மாணவ,மாணவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, தகுதிச்சுற்று நடந்தது.

போட்டியின் இறுதியில் 9ம் வகுப்பு மாணவர்கள் ராக்கேஷ்வர்ஷன், 8ம் வகுப்பு மாணவர் கிஷன்பிரசாத் மு தலிடமும்; 7ம் வகுப்பு மாணவன் பிஜீமேனன், 9 ம்வகுப்பு மாணவர் யோகசக்திதரன் இரண்டாமிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கிருபாகரன், முதல்வர் நேகாபாத்தியா,ஒருங்கிணைப்பாளர் சரண்யா, உடற்கல்வி ஆசிரியர் ஆதிவெங்கடசீனுவாசன், ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி அ ளவில் வெற்றிபெற்ற இருஅணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us