தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : நவ 29, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி தி நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர்' பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பண்ருட்டி தி நியூ ஜான்டூயி உயர்நிலைப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும், ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் புதுச்சேரி 'தின மலர்- பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து, பண்ருட்டி தி நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் 'பதில் சொல், பரிசுவெல்' வி னாடி- வினா போட்டி நடத்தியது. பள்ளி தாளாளர், வேலண்டினாலெஸ்லி தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான 16 மாணவ, மாணவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு , தகுதிச்சுற்று நடந்தது.

போட்டியின் இறுதியில் 9ம் வகுப்பு மாணவி மாலினி, 8ம் வகுப்பு மாணவி லக்ஷனா முதலிடமும்; 9ம் வகுப்பு மாணவிகள் வெற்றி, ஜோனதன்மெஸ்ஸி இரண்டாமிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் வீரதாஸ், பள்ளி செயலர் நிதின்ஜோஷ்வா, பள்ளி முதல்வர் பாலு, தலைமையாசிரியர் வனிதா, ஒருங்கிணைப்பாளர்கள் இந்திராகாந்தி, தனவந்தினி, ஞானசிகாமணி ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.

போட்டியில் பங்கேற்ற அனை த்து மாணவ,மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இருஅணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகி னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us