தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : டிச 06, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: அரசு பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் சார்பில் 'தினமலர்' நாளிதழின் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து, 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.

இதில், 16 மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இதில், பிளஸ் 1 மாணவிகள் ஷாலினி, அக்ஷயா ஆகியோர் முதலிடம், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கமலி, மணிமேகலை இரண்டாமிடம் பிடித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் காளமேகம், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்க ங்கள் வழங்கினர்.

பங்கேற்ற அனைத்து மாண விகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர்கள் மாலா, ராஜகவுரி, ஆசிரியைகள் ரம்யா, கோப்பெருந்தேவி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us