தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தினமலர் - பட்டம ் ' வினாடி வினா

'தினமலர் - பட்டம ் ' வினாடி வினா

'தினமலர் - பட்டம ் ' வினாடி வினா


ADDED : நவ 07, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: 'தினமலர் - பட்டம்' இதழின், வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தாளாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் வாசிப்பு திறனை அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ்,ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.

இதில், 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம், 8 குழுக்களாக பிரிந்து, 2 சுற்றுகளாக போட்டிகள் நடந்ததன.

இதில், பிளஸ்1 மாணவிகள் ஓவியா, ஷிவானியா முதலிடமும், பிளஸ்1 மாணவர்கள் முகமதுஷாலிக், தரணிதரன் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

பள்ளி இயக்குனர்கள் உதயகுமார், விஷ்ணு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

முதல்வர் சுசித்ரா, மேனேஜர் செந்தில்முருகன், கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us