/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 19, 2024 06:55 AM

கடலுார்; 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி வினா போட்டி குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். போட்டியில் பிளஸ் 1 மாணவிகள் கிஷோரி, தரணிஸ்ரீ முதல் இடத்தையும், பிளஸ் 1 மாணவிகள் ஜித்தியஸ்ரீ, நித்தியஸ்ரீ இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் அலோஷியல், சதீஷ், சங்கரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

