/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
கலைமகள் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : டிச 20, 2024 04:38 AM

சிதம்பரம்: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமும் இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து பதில் சொல் ! பரிசை வெல் !! என்ற வினாடி வினா போட்டி காடடுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில், நேற்று நடந்தது.
வினாடி வினா போட்டியில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலைமகள் மெட்ரிக் பள்ளி கல்விகுழுமத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் சஞ்சய்காந்தி வரவேற்றார். போட்டியில் தனுஷா, யோகஸ்ரீ ஆகியோர் கொண்ட குழு முதல் பரிசும், சம்யுக்தா, விஜய் ஆகியோர் கொண்ட குழு இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயத்தை கல்வி குழும தலைவர் முத்துக்குமரன் வழங்கினார். துணை முதல்வர் சந்திரவடிவு வினாடி வினா போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.