/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியை ஏற்பதில் தொடர் இழுபறி
/
அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியை ஏற்பதில் தொடர் இழுபறி
அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியை ஏற்பதில் தொடர் இழுபறி
அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியை ஏற்பதில் தொடர் இழுபறி
ADDED : ஜூலை 19, 2011 12:39 AM
பண்ருட்டி : அக்கடவல்லி அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற அதிகாரிகள் முயற்சிக்காததால் அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் செலவு செய்தும் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது.
பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி சண்முக ஆனந்தா உதவி பெறும் துவக்கப்பள்ளி ராஜவேல் என்பவரால் கடந்த 1950ம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 120 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக் கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் அனுமதியை ரத்து செய்தார். இதற்கிடையே பள்ளி நிறுவனர் ராஜவேல் தனக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ளதால் தன்னால் இனிமேல் பள்ளியை நடத்த முடியாது என கல்வித்துறைக்கு எழுதிக் கொடுத்தார். பள்ளியை மூடினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் ஊர் முக்கிய பிரமுகர்கள் சார்பில் ராஜவேலுக்கு பணம் கொடுத்து பள்ளியை அரசுக்கு வழங்க கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் கல்விக்குழு, கிராம முக்கிய பிரமுகர்கள் சார்பில் தற்காலிகமாக திரவுபதி அம்மன் கோவிலில் பள்ளி வகுப்புகள் துவங்க மாவட்ட கல்வி அலுவலர் அனுமதியளித்தார். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பள்ளி வகுப்புகள் நடந்தது. இப்பள்ளியை அரசு ஏற்று நடத்த முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில் கல்வி மானியத்தின் போது கோரிக்கை வைத்து பேசினார். பள்ளிக்குச் சொந்த இடம், கட்டடம், சுகாதார வசதி, சத்துணவு கூடம் இருந்தால் பள்ளியை அரசு ஏற்றுக் கொள்ளும் என பள்ளி கல்வித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாழடைந்த கட்டத்தை இடித்து கடந்த 2008-09ம் ஆண்டு எம்.பி., நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டது. மேலும் ஊராட்சி நிதி மூலம் சத்துணவு கூடம் 1.50 லட்சம் ரூபாய் செலவிலும், சுகாதார வசதி 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் செய்யப்பட்டது. பள்ளியை அரசு ஏற்க அரசு, எம்.பி., நிதி என 7 லட்சம் ரூபாய் செலவு செய்து அனைத்து தகுதிகள் இருந்தும் கல்வித்துறை அதிகாரிகள் அரசு ஏற்க எந்த அறிக்கையும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பவில்லை. மாறாக பள்ளி நிர்வாகத்தை அரசுக்கு எழுதிக் கொடுத்த பழைய நிர்வாகி பரிந்துரையின் பேரில் ஒர் ஆசிரியர் பணியிடத்திற்கு அதிகாரிகள் 'ப' வைட்டமின் பெற்றுக் கொண்டு கடந்த ஆட்சியில் அனுமதியளித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் தற்போது தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதனால் பள்ளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாமல் திரிசங்கு நிலையில் உள்ளது. இதனை மாற்றிட மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.