ADDED : ஆக 23, 2011 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ம.தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்த நாள்
மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்
சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர்
தட்சணாமூர்த்தி, துரைராஜூலு, ரங்கநாதன், ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலர் தில்லைராசன் வரவேற்றார். மாநில கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில்
சம்பத் கூட்டம் குறித்து பேசினார். மாவட்டச் செயலர் ராமலிங்கம், மாநில
நிர்வாகிகள் வந்தியத்தேவன், குணசேகரன், மன்றவாணன், ஒன்றிய நிர்வாகிகள்
கார்த்திகேயன், வரதராஜன், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர்
அணி துணை அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.