தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது: பெற்றோர், மாணவர்கள் பேட்டி
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது: பெற்றோர், மாணவர்கள் பேட்டி
UPDATED : ஜூன் 14, 2026 06:12 PM
ADDED : ஜூன் 14, 2026 06:11 PM

'தினமலர்' நாளிதழுக்கு நன்றி நான் பிளஸ் 1 படித்து வருகிறேன். எதிர்காலத்தில் இன்ஜினியரிங் படிப்பில் எந்த பாடபிரிவை தேர்வு செய்வது, எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தால் சிறந்த எதிர்காலம் கிடைக்கும், அண்ணா பல்கலையில் எந்ததெந்த பாடப்பிரிவுகள் உள்ளன, கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்ததுடன், பயனுள்ளதாக இருந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
-விஷாலி, கடலுார்.
-----------
சந்தேகங்களுக்கு தீர்வு கடந்தாண்டு நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் எனது நண்பர்கள் பங்கேற்றனர். நண்பர்கள் கொடுத்த ஆலோசனைப்படி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது பயனுள்ளதாக இருந்தது. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்ததால் குழப்பம் நீங்கியது. எந்த கல்லுாரியில் சேருவது, எந்தெந்த பாடப்பிரிவுக்கு எந்தெந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கம் கிடைத்தது.
-சஞ்சய், கடலுார்
-------
தெளிவான ஆலோசனை ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறித்து கல்வி ஆலோசகர்கள் தெளிவான விளக்கம் அளித்தனர். விருப்பமான பாடப் பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாடப் பிரிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது.
-சிவக்குமார், விருத்தாசலம்
---------
எதிர்காலத்திற்கு சிறந்த வழிகாட்டி இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து கல்வி ஆலோசகர்கள் சிறந்த ஆலோசனை வழங்கினர். இன்ஜினியரிங் படிப்பில் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தெளிவான விளக்கம் அளித்தனர். எதிர்காலத்திற்கு சிறந்த வழிகாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
-பாக்கியலட்சுமி, காட்டுமன்னார்கோவில்.
