/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : செப் 24, 2024 06:05 AM
புதுச்சத்திரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், பெரியப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு சுற்றுப் பகுதிகளில், சுமார் 120 ஹெக்டேர் அளவிற்குகுறுவை பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற்பயிர்கள், அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அறுவடை செய்த நெல்லை, அப்பகுதியில் நேரடிநெல் கொள்முதல் நிலையம்அமைக்கும் இடத்தில் குவித்து வைத்திருந்தனர்.
10 நாட்களுக்கு மேலாகியும், நேரடிநெல் கொள்முதல் நிலையம்திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேரடிநெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யும் பணி துவங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.