/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தினமலர் செய்தி எதிரொலி; குடிநீர் குழாய் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி; குடிநீர் குழாய் சீரமைப்பு
ADDED : ஜூன் 04, 2025 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.
புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர்- பெரியக்குமட்டி செல்லும் சாலை வழியாக, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் செல்கிறது. இந்த பைப் லைனில் சேந்திரக்கிள்ளை வடிகால் வாய்க்கால் அருகே, விரிசல் ஏற்பட்டு தண்ணீர் விரயமானது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், உடைந்த பைப் லைன் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.