/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' நாளிதழ் முன்னோடி வர்த்தக சங்கம் வாழ்த்து
/
'தினமலர்' நாளிதழ் முன்னோடி வர்த்தக சங்கம் வாழ்த்து
'தினமலர்' நாளிதழ் முன்னோடி வர்த்தக சங்கம் வாழ்த்து
'தினமலர்' நாளிதழ் முன்னோடி வர்த்தக சங்கம் வாழ்த்து
ADDED : செப் 08, 2025 03:05 AM

கடலுார்: உண்மை செய்தியை வெளியிடுவதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடி என கடலுார் அனைத்து வர்த்தக சங்க இணைச் செயலாளரும், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், சுகந்தி மளிகை உரிமையாளர் செல்லப்பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாமர மக்களுக்கும், படித்தவர்களுக்கும், அரசியல் படிப்பவர்களுக்கும், வணிகர்களுக்கும் 75 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி வருகிறது 'தினமலர்' நாளிதழ். இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தாலும், தினமலர் வாசிப்பது குறையவில்லை.
ஒருநாள் தினமலர் நாளிதழை படிக்கவில்லையென்றாலும், அன்றைய நாட்டு நடப்பு தெரியாமலே போய்விடும்.
அன்றாட நிகழ்வு, வணிகம், விவசாயம், அரசியல், விளையாட்டு, உலகம், உள்நாடு, மாநிலம், மாவட்டம், நகரம் குறித்த செய்திகளை உடனுக்குடன் உண்மையாக வெளியிடுவதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடியாக உள்ளது. தினமலரின் 75 ஆண்டு கால மக்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.