/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 05, 2025 03:24 AM

சிதம்பரம்: சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்கள் கற்கும் வகையில், 'தினமலர்- பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார், மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி ஆசிரியர்கள் நாகலட்சுமி, ரூபா உடனிருந்தனர்.
கார்த்திக் நன்றி கூறினார்.