/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரத்தனா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா
/
ரத்தனா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா
ரத்தனா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா
ரத்தனா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா
ADDED : டிச 10, 2024 06:08 AM

பண்ருட்டி; பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில்சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது.
இதில் 8ம் வகுப்பு மாணவர் புவனேஷ்ஹரி, 6ம் வகுப்பு மாணவர் திருகுகன் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
6ம் வகுப்பு மாணவர் ஹவனீஷ்வர், 7ம் வகுப்பு மாணவர் ஸ்ரீசிவப்பிரியன் அணியினர் 2வது இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற இருஅணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர் சுந்தரபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
வெற்றி பெற்ற முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதில் ஆசிரியர் ராஜலட்சுமி உடனிருந்தார்.