/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை பணி நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு

ADDED : டிச 29, 2024 06:15 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையின் தரம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை முன்மை இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை வழியாக சேலம், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, கும்பகோணம், அரியலுார், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், 4.35 கீ.மீ., துாரம் உள்ள இந்த புறவழிச்சாலை, ரூ.67 கோடி மதிப்பில், சாலை மேம்மபாட்டு திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.
இந்த சாலை பணி மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், சாலையை தரமாக அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர்கள் அய்யாதுரை, அம்பிகா, ஸ்ரீகாந்த் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.