தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

 மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

 மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


ADDED : பிப் 12, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வலியுத்தி, இரண்டாம் நாளாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, திரிபுரா மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல, மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் நடேசன், மாநில துணைத்தலைவர் ஆளவந்தார் உட்பட பலர் பங்கேற்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட 158 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us