/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2026 05:21 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது .
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சம்பத் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் திருமார்பன், மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்ராயன் கண்டன உரையாற்றினர். குணசேகரன், ஆனந்தநாயகி, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண்களுக்கு 3 மாத மகளிர் உரிமை ரூ. 3,000 மற்றும் கோடை கால சிறப்பு சலுகையாக ரூ. 2,000 வழங்கியதை போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு சலுகையாக உரிமை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன.

