ADDED : பிப் 17, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் சிகரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சங்க சிறப்பு தலைவர் குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சையத் முஸ்தபா, முகம்மது ஷெரீப், அமர்ராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாதந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ராஜசேகர் நன்றி கூறினார்.
