/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 19, 2026 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வி.சி., மாநில அமைப்பு செயலர் திருமார்பன், சிதம்பரம் தொகுதி செயலர் தமிழ்வளவன் முன்னிலை வகித்தனர். 26 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கிய, இலவச மனைப்பட்டா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. புவனகிரி தாசில்தார் அன்பழகன், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஜெர்மின் லதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் . 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

