ADDED : ஆக 27, 2026 10:14 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் டிசம்பர் 3 இயக்கம், வள்ளலார் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் அமரேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலமுருகன், செயலாளர் திருஞானசம்பந்தம், துணை செயலாளர்ள பாலமுருகன், செல்லசாமி, சித்ரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் உதவித் தொகை 1,500 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
