தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

 மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்


ADDED : பிப் 11, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தக்கோரி, கடலுார் அண்ணா மேம்பாலம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆளவந்தார் துவக்க உரையாற்றினார்.

பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும், தமிழகத்தில் வழங்கப்படும் 1,500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் போதாது என்பதை வலியுறுத்தி கடலுார் அண்ணா மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us