ADDED : ஆக 25, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்க சங்க மாவட்ட இணை செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆளவந்தார். மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ராசையன், அப்துல் அமித் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆந்திரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போன்று, தமிழகத்திலும் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
