/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2026 05:38 AM

விருத்தாசலம்: எடையூரில் குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த எடையூர் ஊராட்சியில் உள்ள 5 மினி டேங்க் கடந்த ஆறு மாதங்களாக இயங்காமல் உள்ளது. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகம் முன் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செந்தில்குமார், பொருளாளர் மாரிமுத்து, நல்ல நாயகம், விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் அசோகன், துணை செயலாளர் சாமிதுரை, வட்ட தலைவர் விமலா பேசினார். பி.டி.ஓ., லட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்னை சீரமைத்து தருவதாக உறுதியளி அளித்ததால் கலைந்து சென்றனர்.

