ரத்தனா மெட்ரிக் பள்ளியில் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ரத்தனா மெட்ரிக் பள்ளியில் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 08:57 PM

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நி கழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரவி முன்னிலை வகித்தார். பண்ருட்டி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத் துறை பொறுப்பு நிலைய அலுவலர் எழிலவன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் மூர்த்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் எழிலரசன், சரத்குமார் பிரசாந்த், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மழை வெள்ள காலங்களில் ஆறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், தீ விபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்த விளக்கம் அளித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
