/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
/
வேப்பூரில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : அக் 18, 2024 06:39 AM
வேப்பூர்: வேப்பூரில் சர்வதேச பேரிடர் பாதுகாப்பு தின ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
சர்வதேச பேரிடர் பாதுகாப்பு தினத்தையொட்டி, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது. வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தலைமை தாங்கினார். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலக்கிருஷ்ணன், வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பயணிகள், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.