மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பயிற்சி
மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : மார் 04, 2026 05:00 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு நிலையம் சார்பில் மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை, தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அதிகாரி உத்திராபதி மற்றும் வீரர்கள் தீ தடுப்பு பயிற்சி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
பேரிடர் தீ மற்றும் மழை வெள்ளக் காலங்களில் பாதுகாப்பான முறையில் இருக்க செயல்விளக்கமுறை செய்து காண்பித்தனர்.
வெள்ளத்தில் நீந்தி காத்து கொள்வது, பேரிடரில் சிக்கி தவிப்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து விளக்கமளித்தனர்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
