/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
/
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
வீற்றிருந்த பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
ADDED : ஜன 15, 2024 06:37 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் சார்பில், திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடந்தது.கடந்த டிசம்பர் 7ம் தேதி சொற்பொழிவாளர் தோத்தாத்திரி பங்கேற்று, தொடர்ந்து ஒரு மாதம் தினமும் சாலையில் இரண்டு மணி நேரம் திருப்பாவை குறித்து சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவு நேற்றுடன் முடிவடைந்தது.
பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை காட்டுமன்னார்கோவில் வர்த்தக சங்கத் தலைவர் சீனிவாச நாராயணன் செய்திருந்தார்.