தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு 

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு 

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு 


ADDED : ஏப் 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 317 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடி மையங்களில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட்., கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவைகள், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கத்தில் பாதுகாப்பாக பூட்டி 'சீல்' வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று தேர்தலையொட்டி, நேற்று காலை 10:30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 'ஸ்ட்ராங்' ரூமில் 'சீல்' அகற்றப்பட்டது.

அதன்பின், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா முன்னிலையில், 317 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us