/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிஜிட்டல் பேனர் வைப்பதில் அ.தி.மு.க., வினரிடையே தகராறு
/
டிஜிட்டல் பேனர் வைப்பதில் அ.தி.மு.க., வினரிடையே தகராறு
டிஜிட்டல் பேனர் வைப்பதில் அ.தி.மு.க., வினரிடையே தகராறு
டிஜிட்டல் பேனர் வைப்பதில் அ.தி.மு.க., வினரிடையே தகராறு
ADDED : ஜூலை 12, 2025 03:38 AM
கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி வருகையையொட்டி, பேனர் வைப்பதில் அ.தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாநகரில், இன்று மாலை சீமாட்டி சிக்னல் பகுதியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்று பேச உள்ளார். நிகழ்ச்சிக்காக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சீமாட்டி சிக்னல் அருகே பேனர் வைத்துள்ளனர்.
அருகிலேயே மற்றொரு தரப்பினர் பேனர் வைத்தனர். அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்வதற்காக மேடை அமைக்க வேண்டும், அங்கு பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
அதற்கு மறுத்துவிட்ட அந்த தரப்பினர், எங்கள் பேனரை அகற்றக்கூடாது என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நேரில் சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.