/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் விழாவில் தகராறு : 3 பேர் கைது
/
கோவில் விழாவில் தகராறு : 3 பேர் கைது
ADDED : ஆக 02, 2025 06:49 AM
குறிஞ்சிப்பாடி : கோவில் விழாவில் தகராறு செய்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் சத்தமிட்டதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த செந்தில், 23; அமிர்தலிங்கம், 27; கார்த்திக், 23; ஆகியோர் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராமலிங்கம் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.