ADDED : அக் 05, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள லால்பேட்டையில் மீன்வளத்துறை சார்பில், மீன் குஞ்சுகள் விநியோகத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி மையம் உள்ளது. உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில், ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, மீனவர்கள் பிடித்து வியாபாரம் செய்து வாழ்வாதாரம் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லால்பேட்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி மையத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்னர்