/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் மறியலுக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கல்
/
ரயில் மறியலுக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கல்
ரயில் மறியலுக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கல்
ரயில் மறியலுக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : மார் 01, 2024 12:10 AM

கடலுார்: கடலுாரில் ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி அரசியல் கட்சியினர் துண்டு பிரசுரம் வழங்கினர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தை கடலுார் திருப்பாதிரிப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரம் இரவு 9:00 மணி வரை நீட்டிப்பு வழங்க வேண்டும்.
புதுச்சேரி - சென்னை இருப்பு பாதைத் திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் அனைத்து கட்சிகள் மற்றும் குடியிருப் போர் சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 2ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக போராட்டக் குழுவினர் கடலுார் லாரன்ஸ் ரோட்டில் வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, ஆதரவு திரட்டினர். தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், வி.சி.கட்சி மாவட்ட மைய செயலாளர் செந்தில், ம.தி.மு.க., ராஜு, இந்திய கம்யூ., குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், மாநகர பொது நல அமைப்பு தலைவர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் சுப்ராயன் பங்கேற்றனர்.

